மோக முள்


 

 
லௌகீகம் புறக்கணித்து
மானிடர்கள் துரத்தி விட்டு
புத்தனுக்கு அடுத்தவனாய்
புழுத்தித் திரிந்த போதும்
காமம் கணைக்கையிலே
காலிடுக்கில் துடிக்கையிலே
நான் நாடுமொரு தாசியிருந்தாள்!
 
நயமிருந்தும் உயிர் மரித்தக் கண்கள்
அவள் கண்கள்
ராத்திரி விடியலிலே  சத்திர இகமாய் 
அவள் உடல் 
தளர்ந்திருந்தும் உறவழைக்க 
கிளம்பிவிடும் தனங்கள்
உடை மறைத்தும் உடல் மறைக்கா
ஓராயிரம் கீறல்கள்  

மேலுதடு அலகியல் கற்பனைக்கு
கீழுதடு ஆண்களுக்கு விற்பனைக்கென
விபச்சார விளம்பரமாய் ஒரு தேவதை!
 
***
மோகமழைக்கும் போதெல்லாம்
வேகமெடுத்து அவள் சரண் புகும்
அனாதைப் பறவையாய் நான்!
 
தாகமெடுத்த எனக்கு
தேகங்கொடுத்து அணைக்கும்
தாய் பறவையாய் அவள்!
 
கூடற்பொழுதிலெல்லாம்
என் ஐந்தங்குல ஆண்மை
அத்தணையாண்டவளை
மரமென மாற்றியிருந்த
மரத்துப்போ பெண்மைக்கு
எள்ளளவும் தீனிட்டதில்லை
அல்லது தீனிடத்தேவையில்லை
 
அவள்  பொருள் தேவைக்கு தேகம் விற்றாள்
நான் தேகத் தேவைக்கு பொருள் விற்றேன்
 
இருந்தும்
நான் பரவசத்தில் எக்காளமிட
அவள் பரவசமளிக்க 
ஆலாபனை செய்வாள் 

தூரமிருக்கும் நிலவை 
சோறூட்ட அழைப்பது போல்
புதுபுடவைக்குப் பழம்புடவை 
இலவசமாய் விற்பது போல் 

பாசப் பொய்
அல்லது
வியாபார நுனுக்கம்! 

எதுவென்ன ஆன போதும் 
அவள்  ஓரங்க நாடக ஓலம்
என் உச்சத்திற்கு ஆறுதல் பரிசு! 

*** 

முத்தமிடத் தொடங்க நடுங்கி
முன்னுறை கழற்றத் தெளிந்து
காசுப் புழக்கத்தில் முடியும்
நாகரிக உறவு நாமடைந்த உறவு
 
ஒரு நூறு இரவுகள் 
ஒன்றாக கழித்திருப்போம்
அல்லது ஒரு நூறு இரவுகளை
எப்போதோ கடந்திருப்போம் 
 
பேச்சுப்பரிமாற்றமோ
ஆறுதலோ அனுதாபமோ
காமம் தவிர்த்த ஏதொரு மானிட உணர்வோ
எங்களுக்குள் இருந்ததில்லை
அல்லது 
இருந்தும் தெரிந்ததில்லை  

விரத்தியில் வித்தான
விந்து கடத்த 
வீரியம் ஏத்தி ஆண்மை காட்டும் 
அவசர ஆண்களின்
ஒரு விரயக் கலயமாய் 
இருந்த அவளுக்கு 

விந்து சுமந்த நீர்மம் கடந்து
அவள் நெஞ்சம் நனைத்த
ஈரம் சுமக்கும் ஒருவனாய் நான் 

ஞாலம் வெறுத்துச்  சோர்வடைந்து
பாடைப் பிணமாய் கிடக்கையிலே 
 
மர்மப் பார்வையிலும்
மார்பகப் பள்ளத்திலும்
வாழ்க்கை இருக்கிறது
வானம் சிரிக்கிறதென்று
சாமரம் வீசி நகைக்கும்
காவியத் தேவதை  ஒருத்தியாய் அவள் 

*** 

மாரி நடந்து
கோடை நனைந்து
ஆண்டு கழிய 

ஒரு பரஸ்பரம்
எம்முள் ஊஞ்சலாடியது 

எருமையாய் நான் 
உண்ணித் திண்ணும் 
குருவியாய் அவள்
எருமையாய் அவள்
உண்ணித் திண்ணும் 
குருவியாய் நான் 

அவள் ஆலாபனையில்
இசை உயிரோடியது
அவள் சிரிப்பு 
உடுத்தப் பழகியிருந்தால்
ஐந்தங்குலம் 
சௌபாக்யமாய் இருந்தது
வரண்ட அவள் யோனி
வெள்ளைத் தெளிக்கத் தொடங்கியிருந்தது 

நானும் 
கவிதை எழுத பழகியிருந்தேன் 

பெயரிடப்படாத உறவுக்கு 
ஒரு பெரும் பெயரை
எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி
கணைத்துக் கொண்டிருந்தது 

காசுப் புலக்கம் குறைந்து
பேச்சுப் புலக்கம் கூடியது 

பகலை விட
இரவில் 
வாழ்க்கை
நிறைய நிறங்கள்
போர்த்திக் கொண்டது 

*** 

காத்திருந்தது போல்  
ஓரிரவில் காதல் சொன்னாள் 
 
கட்டியணைத்தேன்
காது கடித்தேன் 

"நானும்  காதலிக்கிறேன்
ஆனால்..."
என்றிழுத்தேன் 

சொல்லென்று 
சிரிப்பு மருவ கேட்டாள் 

"ஆனால்....
நீ ஒரு வேசி"
என்று தலை கவிழ்ந்து
பின் தலை நிமிர்ந்தேன் 

கதறி அழுது - என்
கன்னத்தில் ஓங்கியறைந்தாள் 

தலையிலடித்துக் கொண்டாள்
நகங்கொண்டு மார் கிழித்துக் கொண்டாள் 

தரையில் உருண்டாள்
புழுவாய் நெளிந்தாள் 

கல்லென விரைத்து
"சீ"
என்று கத்தி
முகந்திருப்பிக்கொண்டாள் 

கெஞ்சினேன்
நானே என்னை அறைந்து கொண்டேன்
நொந்து நொதித்தேன்
பின்வருத்தம் கொண்டேன் 
 
காதலை உதிர்த்து விட்டு
கத்தி அழுது
செத்துக் கொண்டிருந்தேன் 
 
விடியலுக்கு இரவு 
கரும்புடவை தளர்த்திக்கொண்டிருந்தது
எம்முறவு 
கரும்புடவை போர்த்திக்கொண்டிருந்தது

கடைசி வார்த்தை
கசையாலடித்துக் கொண்டிருந்தது
இன்னும் 
கசையடிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

 


"சீ" 




- அன்புநாதன் ஹஜன் -






 

 

 

 

 

 

 

 

 

x

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்