முலைகொண்டு ஒரு கவிதை எழுதுகின்றேன்
மானே மயிலிறகே மாசற்ற மாதுளையே கண்ணே கனியமுதே கவிதை பெட்டகமே பாவியுன் தாய் பாதகத்தி படு பாவி! நானுனக்கு வார்த்த பால் பாசாங்கு திரவம் என்னரவணைப்பு அட்டைக் கடி சீமைக்கிளியே! கவிபாட பிறந்த உன் திருவாயில் சதிகாரியென் முலை திணித்து பாலூட்டும் போதெல்லாம் உன் பட்தடங்கள் என்முலையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகின்றன திவட்டா மென்தேனே பெற்றெடுத்த போதும் – உனை பெற்றவன் பெயர் தெரியாத பேரழுக்கு பிண்டம் நான்! பெற்றவன் பெயர் கேட்டுத் தானே ஊருன்னை உருட்டிவிளையாடும் அவன் சாடையில் இருப்பதாய் சொல்லும் இவன் சாடையில் இலிப்பதாய் சொல்லும் கருப்பனென்றால் கந்துவட்டிக்காரன் வெள்ளைத்தோலென்றால் ஆன்மீக ஆசாமி ராஜமாணிக்கமே ரீங்கார இசையே வேசிதான் உன்னன்னை தேகம் விற்று தாகம் தீர்ப்பவள் தான் கால் விரித்து காசு பார்ப்பவள் தான் ஆனால் நல்லத்தாய் சீ சுயநல பகட்டு நடக்கவிட்டு நகைக்கும் தேவிடியாள் பெத்ததென காதருகில் கத்தும் பெத்தவனை காட்டச் சொல்லி பேய் கணக்காய் அலறும் கண்மணி என்னை விலைபேச உன்னை தூதனுப்பும் இதுவனைத்தும் தெரிந்தே கருவுக்கு தாட்சண்யம் காட்டுவதாய் சிசுவுக்கு சாபமளித்து விட்டேன் ஐய்யோ அய...