Posts

Showing posts with the label நமக்கென பெருநகரம்

நமக்கென பெருநகரம்

Image
வா வா அடுக்குமாடி சிறையின் சுதந்திரமற்ற காற்றையே  எத்தனை நாள் தான் சுவாசிப்பாய் வா வா வெளியே குதித்து விடு இறுக்கமாய் கை பிடித்துக்கொள் நகரத்தெருக்களின் ராத்திரி வண்ணங்கள் உன் எண்ணங்களைப்போலவே  சினன்னாப்பின்னமான அழகு கடற்கரை முந்தி விரித்துக் காத்திருக்கிறது திடல் அமர்ந்தவாறு எச்சில் துப்ப வா! கண்ணீரில் மட்டுமல்ல சுவாசத்திலும் உப்புப் பூக்கட்டும் துருப்பிடிப்பதா நம் உடல்? காலிடுக்கில் குடியமரும்  தற்காலிக பூனைகளின் உடல் கோதலாம் விழுதுவிட்டு காத்திருக்கும் கற்கால மரங்களின் உடல் தீண்டலாம் திரையரங்குகளின் தீண்டப்படாத இருக்கைகளின் தாகத்தை உதட்டெச்சில் கொட்டியே தீர்த்து விட்டு போகலாம் கோல்ஃபேஸ் றால் வடை கொறித்து கொச்சிக்கடை வரை நடக்கலாம் கொம்பனி தெரு நெய் தோசைத் துண்டுக்கு கொட்டிக்காவத்தையிலிருந்தே நடைபவனி போகலாம் அதே புத்தகங்கள் அதே கக்டஸ் செடிகள் அதே சோஃபா அதே நெட்ஃபிளிக்ஸ் பொய்கள் அதே புராணம் மிஞ்சிப் போனால் நாகரீக காஃபி ஷாப்ஸ்  சலிக்கவில்லையா? சிரிப்பு வருகிறது! ராத்திரி வேளைகளில் விழித்துக் கொள்ளும் வர்த்தக நகரத்தின் கருவளையம் தெரியுமா? வா வா மேகங்களிடமிருந்து தப்பித...