Posts

A Toxic Flutterby

Image
  Golden rays! Ejaculation of the drawing sun I was sitting there On the riverbed Admiring the evening, As if it would never arise after Fear of loneliness and darkness Someone threw a stone into the river I was reactless Though there was an urge to turn back And raise my brows But I remained quiet Then another Then another I waited Ripples sat on a stage Then it started to reflect a face like She That girl In that house near the lane top I knew her With her curvy nose And curveless body Conversing eyes A long time ago I had a crush on her But I didn't react to that emotion As it's as far as touching a star "Hi," she said! "Me?" I asked! "Yes, you! What are you doing?" "Nothing," "Hmm... But admiring nature" That's how all these things started We spoke We listened We sang We walked We... We slept until the night was warm Everything I yearned for from afar Everything I ever dreamt of These everythings are within my reach Happ

கண்ணம்மா!

Image
  வானமடி நீ எனக்கு  வஞ்சமடி நானுனக்கு போகமடி நீ எனக்கு பீடையடி நானுனக்கு தீத் தெளித்த வார்த்தை வந்து  தீங்கனாவாய் வாட்டுமென்று  எள்ளளவும் எண்ணவில்லை  ஏரிக்கரையே மாயக்கனவே கண்ணம்மா!      தூயப்பனி நீ எனக்கு துன்பவெயில் நானுனக்கு அன்னைமடி நீ எனக்கு பேற்றுவலி நானுனக்கு சோர்ந்து நின்ற போதினிலே சோகம் கேட்கவில்லையடி சோதனைக்குள் வீழ்த்திவிட்டேன்  சேற்றுமலரே செல்லமழையே கண்ணம்மா!     தென்றலடி நீ எனக்கு தீயப்புயல் நானுனக்கு வெண்கமலம் நீ எனக்கு வன்தவளை நானுனக்கு ஒற்றைவழி பாதையென என்னை மட்டும் எண்ணி நின்றேன் உன்னை போற்றவில்லையடி  வெள்ளைச் சிரிப்பே வாகை நிழலே கண்ணம்மா!     வானமழை நீ எனக்கு வற்றுங்கடல் நானுனக்கு பிள்ளைமொழி நீ எனக்கு நிந்தைமொழி நானுனக்கு கோதிவிட்ட மென்விரலே கீரிவிட்டேன் நின்மனதை நின்கலக்கம் தீருமடி பாசக்கயிறே நேசமயிலே கண்ணம்மா!     வேடந்தாங்கல் நீ எனக்கு வேடனடி நானுக்கு செங்கரும்பு நீ எனக்கு செய்வினையோ நானுனக்கு மோட்சமென நீயணைக்க சாபமென நான் கிடைத்தேன் என்னிழலும் வாட்டுமுன்னை  வேகமெடுத்து தூரம்நடடி கண்ணம்மா!     நல்லக்கவி நீ எனக்கு நச்சரவம் நானுனக்கு செம்மதுரம் நீ எனக்கு தொற்றும் பிணி

முலைகொண்டு ஒரு கவிதை எழுதுகின்றேன்

Image
  மானே மயிலிறகே   மாசற்ற மாதுளையே கண்ணே கனியமுதே கவிதை பெட்டகமே பாவியுன் தாய் பாதகத்தி   படு பாவி! நானுனக்கு வார்த்த பால் பாசாங்கு திரவம் என்னரவணைப்பு அட்டைக் கடி சீமைக்கிளியே! கவிபாட பிறந்த உன் திருவாயில் சதிகாரியென் முலை திணித்து பாலூட்டும் போதெல்லாம் உன் பட்தடங்கள் என்முலையில் கரும்புள்ளி செம்புள்ளி குத்துகின்றன திவட்டா மென்தேனே பெற்றெடுத்த போதும் – உனை பெற்றவன் பெயர் தெரியாத பேரழுக்கு பிண்டம் நான்! பெற்றவன் பெயர் கேட்டுத் தானே ஊருன்னை உருட்டிவிளையாடும் அவன் சாடையில் இருப்பதாய் சொல்லும் இவன் சாடையில் இலிப்பதாய் சொல்லும் கருப்பனென்றால் கந்துவட்டிக்காரன் வெள்ளைத்தோலென்றால் ஆன்மீக ஆசாமி ராஜமாணிக்கமே ரீங்கார இசையே வேசிதான் உன்னன்னை தேகம் விற்று தாகம் தீர்ப்பவள் தான் கால் விரித்து காசு பார்ப்பவள் தான் ஆனால் நல்லத்தாய் சீ  சுயநல பகட்டு நடக்கவிட்டு நகைக்கும் தேவிடியாள் பெத்ததென காதருகில் கத்தும் பெத்தவனை காட்டச் சொல்லி பேய் கணக்காய் அலறும் கண்மணி என்னை விலைபேச உன்னை தூதனுப்பும் இதுவனைத்தும் தெரிந்தே கருவுக்கு தாட்சண்யம் காட்டுவதாய் சிசுவுக்கு சாபமளித்து விட்டேன் ஐய்யோ அய்யயோ எவனெவனோ விந்து

மீசைமுடி சோபிதம்

Image
என்னுலகாழும் எசமானே எழுமிச்சஞ்செடியே சேவகி பார் கண்ணடித்து கடாட்சம் தா மெல்லத் தலையுலுப்பு  வா  வந்தென் மடி படு காலாட்டி காலாறு கதை கேள் விஷமஞ்செய் புடவைப் புகு உள்ளாடை கடித்து வை உயிரினை ஏலமெடு கருஞ்சாத்தானே தேவதை படையெடுப்பே என் தாபப் பிறப்பின் திறவுகோல் நீ அசாமான்ய சாபல்யம் நீ அகில அந்தி நீ அழகு ஆபத்து நீ மீண்டும் வா பிரிந்து நகராதே நரகம் கொடுக்காதே வா வந்தென் மடி படு தொடையிடை உலவு தோராயமாய்  உடலகல உயரம் அள  கன்னங்களில் எச்சில் பூசு விரலிடுக்கில் கடி வீம்புக்கு பல் பதி விபரீதம் விளையாடு  சட்டைக்குள் ஒழி தேடுவதாய் தேடி தோற்கிறேன் அபாயக் குறும்பு செய் சண்டைக்கிழுத்து சரணடைகிறேன் மன்மத பண்டமே வளைந்த உன் நகங்கொண்டு வளைந்த என் முலைக் கீறு மீசை முடி மூக்குள் நுனை இன்பத்தின் வரம்பு காட்டு காலிடை உரசு பாவமாய் தலை திருப்பி பாவியெனக்கு உயிர் பிச்சை விட்டெரி வா வா வந்திங்கமர் வாய் காட்டு கால் நீட்டி விரல் காட்டு அச்சோ  என் தெய்வமே தெளிந்த நிலவே வைரச்சுரங்கமே தங்கமுருக்கும் சூழையே  வாலாட்டும் மின்மினியே எங்கு போய் என்ன செய்தாய் உன் விரல்களில் காயமேன்? தாரகையே கண்ணீர் சுரக்க செய்யாதே என் மெய்கிக

இந்த ஊடலை வேண்டாமென்கிறேன்

Image
  பேரன்பே! எடையற்ற உன் கனம் என் திசைகளை உருகுலைக்கிறது என் உயிர் திவலைகளில் ஊறவைத்த - உன் உலர் கரத்தின்  அவ்வொற்றை ஸ்பரிசம் வறண்டு வெடித்து ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது   தாபதப் பேறே! கைக் கடந்து போவது தான் வாழ்க்கையின் நிச்சயிக்கப்பட்டத் தத்துவமா? திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் கசையால் அடிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்பதன் பேரருளா?   என் முதல் பூவே! தேன் குடிக்கும் போது முத்தங்கள் மட்டும் விதைத்து விட்டால் நான் தான் ஒரு பட்டாம்பூச்சியா?   அழுந்த என் பாதம் பட்டப் போது உயிர் வாடி விழுகிறாய் என்றால் நீ தான் ஒரு பெரும்பூவா?   காலம் சற்று கடுமையாய் ஊதி விட்டக் காற்றில் கரைந்து கலைந்து போவத்தான் நம் காதல் என்பது வேலிப்பருத்தியா?   இல்லை! நானென்பது ஒரு கனக்கும் வண்ணாத்தி நீயென்பது ஒரு நந்தவனம் நம் காதல் என்பது விழுது விட்ட பெரும் மரம்!   காயப்படாத காகிதம் தான் கவிதைகளை பிரசவிக்குமா? முலைக்காம்பை கடிக்காத குழந்தையும் கடி வலி பொறுக்காத ஒருத்தாயும் இங்கெங்கேனும் சீவிக்கின்றனரா?   வைராக்கியமே! நாளைய புது நாள் காயங்களுக்கு களிம்பிடும் என்றா நினைக்கிறாய்? அடியே அது புழுக்களை சேமித்துக் கொண்டிரு