மீசைமுடி சோபிதம்



என்னுலகாழும் எசமானே
எழுமிச்சஞ்செடியே
சேவகி பார்
கண்ணடித்து
கடாட்சம் தா
மெல்லத் தலையுலுப்பு 

வா 
வந்தென் மடி படு
காலாட்டி காலாறு
கதை கேள்

விஷமஞ்செய்
புடவைப் புகு
உள்ளாடை கடித்து வை
உயிரினை ஏலமெடு

கருஞ்சாத்தானே
தேவதை படையெடுப்பே

என் தாபப் பிறப்பின்
திறவுகோல் நீ
அசாமான்ய சாபல்யம் நீ
அகில அந்தி நீ
அழகு ஆபத்து நீ

மீண்டும் வா
பிரிந்து நகராதே
நரகம் கொடுக்காதே

வா
வந்தென் மடி படு
தொடையிடை உலவு
தோராயமாய் 
உடலகல உயரம் அள 

கன்னங்களில் எச்சில் பூசு
விரலிடுக்கில் கடி
வீம்புக்கு பல் பதி
விபரீதம் விளையாடு 

சட்டைக்குள் ஒழி
தேடுவதாய் தேடி தோற்கிறேன்
அபாயக் குறும்பு செய்
சண்டைக்கிழுத்து சரணடைகிறேன்

மன்மத பண்டமே
வளைந்த உன் நகங்கொண்டு
வளைந்த என் முலைக் கீறு
மீசை முடி மூக்குள் நுனை
இன்பத்தின் வரம்பு காட்டு
காலிடை உரசு
பாவமாய் தலை திருப்பி
பாவியெனக்கு
உயிர் பிச்சை விட்டெரி

வா வா
வந்திங்கமர்
வாய் காட்டு
கால் நீட்டி விரல் காட்டு

அச்சோ 
என் தெய்வமே
தெளிந்த நிலவே
வைரச்சுரங்கமே
தங்கமுருக்கும் சூழையே 
வாலாட்டும் மின்மினியே

எங்கு போய் என்ன செய்தாய்
உன் விரல்களில் காயமேன்?
தாரகையே
கண்ணீர் சுரக்க செய்யாதே

என் மெய்கிகர் பிரசவமே 
வா வா
மடி படு
எச்சிலால் களிம்பிடுகிறேன்
கண்ணீரால் கவலை துடிக்கிறேன்

மாசித் துண்டே
உன் ஜீவனை விட்டு அகலாதே
என்னுடனே இரு
உடல் சூட்டில் தூக்கமடை

நெஞ்சுநெய்த செல்லப்பூனையே
காற்சட்டை கவ்வியபடி பின் தொடர் 
கண்மூடிக் கொள்கிறேன்
நாக்குத் துருத்தி
சட்டைக்குள் புகுந்தொழி
பரஸ்பரம் தேடி தோற்போம்!

- அன்புநாதன் ஹஜன் -

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்