கண்ணம்மா!



 

வானமடி நீ எனக்கு  வஞ்சமடி நானுனக்கு
போகமடி நீ எனக்கு பீடையடி நானுனக்கு
தீத் தெளித்த வார்த்தை வந்து  தீங்கனாவாய் வாட்டுமென்று 
எள்ளளவும் எண்ணவில்லை 
ஏரிக்கரையே மாயக்கனவே கண்ணம்மா!  

 

தூயப்பனி நீ எனக்கு துன்பவெயில் நானுனக்கு
அன்னைமடி நீ எனக்கு பேற்றுவலி நானுனக்கு
சோர்ந்து நின்ற போதினிலே சோகம் கேட்கவில்லையடி
சோதனைக்குள் வீழ்த்திவிட்டேன் 
சேற்றுமலரே செல்லமழையே கண்ணம்மா! 

 

தென்றலடி நீ எனக்கு தீயப்புயல் நானுனக்கு
வெண்கமலம் நீ எனக்கு வன்தவளை நானுனக்கு
ஒற்றைவழி பாதையென என்னை மட்டும் எண்ணி நின்றேன்
உன்னை போற்றவில்லையடி 
வெள்ளைச் சிரிப்பே வாகை நிழலே கண்ணம்மா! 

 

வானமழை நீ எனக்கு வற்றுங்கடல் நானுனக்கு
பிள்ளைமொழி நீ எனக்கு நிந்தைமொழி நானுனக்கு
கோதிவிட்ட மென்விரலே கீரிவிட்டேன் நின்மனதை
நின்கலக்கம் தீருமடி பாசக்கயிறே நேசமயிலே கண்ணம்மா! 

 

வேடந்தாங்கல் நீ எனக்கு வேடனடி நானுக்கு
செங்கரும்பு நீ எனக்கு செய்வினையோ நானுனக்கு
மோட்சமென நீயணைக்க சாபமென நான் கிடைத்தேன்
என்னிழலும் வாட்டுமுன்னை 
வேகமெடுத்து தூரம்நடடி கண்ணம்மா! 

 

நல்லக்கவி நீ எனக்கு நச்சரவம் நானுனக்கு
செம்மதுரம் நீ எனக்கு தொற்றும் பிணி நானுனக்கு
நான் வருத்தி நீ வருந்த தீ எரித்து வாட்டுதடி
பிறவி பிழைத்ததடி பேய்ப்பிடித்து ஆட்டுதடி
பிள்ளையமுதே பிஞ்சுநிலவே கண்ணம்மா! 

 

பூனைமுடி நீ எனக்கு பூச்சிரைச்சல் நானுனக்கு
மோகமடி நீ எனக்கு மோழையடி நானுனக்கு
நாமளந்த வாஞ்சையெல்லாம் ஈயமர்ந்து தேய்கிறது
நாடியெல்லாம் வேகுதடி 
நந்தவனமே தங்கவடமே கண்ணம்மா!


- ஹஜன் அன்புநாதன் - 

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்