மோன சிவிகையிலே




ஐந்துமணி வெய்யில்

ஆலமர நிழல்

காலுரசும் பூனை

கள்ளுக்கருவாடு


சேமங்கீரை

தேங்காய்ப்பூ ரொட்டி

மணல் சீத்தா

மாங்காய் - உப்பு


கடற்கரை

காக்கை சத்தம்

மழை மேகம்

மாலை நேரம்


ராஜா பாட்டு

ராத்திரி விட்டில்

வரப்பு நடை

வாத்துக் கூட்டம்


தயில வாசம்

வெந்நீர் குளியல்

கஞ்சா வாசம்

காகிதக் கப்பல்


கருப்பு மேகம்

காது குடைதல்

ரோஜா தோட்டம்

பனித்துளி


தேநீர் வடை

தேயிலைத் தோட்டம்

தென்றல் காற்று

தென்னந்தோப்பு


நீல வானம்

காலையில் போர்வை

பகல் பிறை 

பிஞ்சுக் கொய்யா


லயத்துச் சண்டை

சேலையில் பிட்டம்

அமாவாசை

பௌர்ணமி நிலவு


அடங்காத மழை

ஊரடங்கும் நேரம்

அத்தர் வாசம்

அசதி கதைகள்


மெதுவடை 

வெள்ளை வானம்

ஈரக்காற்று

நனைந்த சன்னல்


சில்லென பீர்

சின்னச் சிரிப்பு

புரிந்துணர்வு

கொசுக்கடி


தொடுவானம்

கோழிக்குஞ்சு

பெட்ரோல் வாசம்

இன்ஸ்டாகிராம்



நீ 

உன் இருப்பு

கட்டியணைத்தல் 

ஒரே தலையணை


வாயில் உன் முடி

நெஞ்சில் உன் கடி 

ரத்தமெங்கும் உன் எச்சில்

சட்டையெல்லாம் உன் வாசம்


உன் தொடையில் நான்

என் தலையில் உன் கை

மூடியவாறு நான்கு கண்கள்

திறந்து கொள்ளும் பிரபஞ்சம்


உன் வெப்பம்

என் வியர்வை

உன் ஆதிக்கம்

என் கவிதைகள்


நம் வீடு

நம் தனிமை

நம் வாழ்வு

நம் நாம்


எங்கெங்கும் உன் சிரிப்பு

சப்தமெல்லாம் உன் கொலுசு

உடல் போர்த்த உன் கூந்தல்

கல்லுளி மங்கனாய் நான்


தெய்வமாய் நீ

தேவமாய் பொழுது

குழந்தையாய் நான்

இப்படியிருக்க மோனமாய் ஒரு சாவு!


- அன்புநாதன் ஹஜன் -

Comments