முலைகொண்டு ஒரு கவிதை எழுதுகின்றேன்


 



மானே மயிலிறகே 
மாசற்ற மாதுளையே
கண்ணே கனியமுதே
கவிதை பெட்டகமே


பாவியுன் தாய்
பாதகத்தி 
படு பாவி!


நானுனக்கு வார்த்த பால்
பாசாங்கு திரவம்
என்னரவணைப்பு
அட்டைக் கடி


சீமைக்கிளியே!
கவிபாட பிறந்த உன் திருவாயில்
சதிகாரியென் முலை திணித்து
பாலூட்டும் போதெல்லாம்
உன் பட்தடங்கள் என்முலையில்
கரும்புள்ளி செம்புள்ளி குத்துகின்றன


திவட்டா மென்தேனே
பெற்றெடுத்த போதும் – உனை
பெற்றவன் பெயர் தெரியாத
பேரழுக்கு பிண்டம் நான்!


பெற்றவன் பெயர் கேட்டுத் தானே
ஊருன்னை உருட்டிவிளையாடும்
அவன் சாடையில் இருப்பதாய் சொல்லும்
இவன் சாடையில் இலிப்பதாய் சொல்லும்
கருப்பனென்றால் கந்துவட்டிக்காரன்
வெள்ளைத்தோலென்றால் ஆன்மீக ஆசாமி

ராஜமாணிக்கமே
ரீங்கார இசையே
வேசிதான் உன்னன்னை
தேகம் விற்று தாகம் தீர்ப்பவள் தான்
கால் விரித்து காசு பார்ப்பவள் தான்


ஆனால்
நல்லத்தாய்


சீ 
சுயநல பகட்டு


நடக்கவிட்டு நகைக்கும்
தேவிடியாள் பெத்ததென காதருகில் கத்தும்
பெத்தவனை காட்டச் சொல்லி
பேய் கணக்காய் அலறும்
கண்மணி
என்னை விலைபேச
உன்னை தூதனுப்பும்
இதுவனைத்தும் தெரிந்தே
கருவுக்கு தாட்சண்யம் காட்டுவதாய்
சிசுவுக்கு சாபமளித்து விட்டேன்


ஐய்யோ அய்யயோ
எவனெவனோ விந்துவிட்ட
கழிப்பறை இருட்டுக்குள்ளா
பத்தரை மாதமுனை
பட்டினியாய் விட்டிருந்தேன்?

  
சீ
ராட்சசியாகிய நான்!  


பேரமுதே
பெருந்தவறன்றொ
கருணையின் பால் இழைத்து விட்டேன்


என் வயிறே வற்றிக்கிடக்க
இன்னொரு வயிற்றிற்கு
எப்படி படியளக்கப்போகின்றேன்
உன் தேகம் வளர்க்கவும்
என் தேகம் விற்க நேருமோ நேசமே?
உடல் விற்பது தெரிந்தால்
உன்னுதடும் எனை வைய்யுமோ நேசமே?


வெளியூர் செல்லலாம்
வேற்றுலகம் தேடலாம்
வெண்மதி தட்டுப்பட 
வெகு தூரம் செல்லலாம்


வெண்ணிலவே சென்றாலும்
வேசிகளுக்கென்று வசைகள்
பார்த்தொதுக்கப்பட்டிருக்கும்

 

செந்தேனே
சீம்பால் மறுத்து
கள்ளிப்பால் காட்டியிருக்கலாம்

சீ


யோனியோடு சேர்ந்து
இருதயமும் மரத்துவிட்டதா


பேரழகு தோரணம் நீ
எவன் என்னச்சொல்லட்டும்
நானுனை நாகரிகமாய் வளர்ப்பேன்
நாளையிவர் வாயிடையில்
கட்டைவிரல் நட்டுவைக்க
நாயகனாய் நீ வளர்வாய்

 

செல்லமே
உன் உதடருகே தாய்ப்பால் எச்சம்
துடைத்துவிடும் போது
தூக்கம் தொலைத்து விடாதே
நிம்மதியாய் தூங்கியெழு!


நாளைக்கு நமக்கு
போராட்டம் இருக்கிறது!



- அன்புநாதன் ஹஜன் -

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்