இப்படியும் ஒரு கலவி வகை








நொய்யளவுமென்
உடல் விட்டகலா
வியர்வை சுகந்தத்தின்
சொந்தக்காரியே!

பெரும்புணர்ச்சியே!
வா
வந்தென் அருகில் அமர்!

மயிர் கோது;
உச்சியில் முத்தம் விதை;
தலைகொய்து கொண்டு
முண்டத்தை 
அண்டத்தின் கடைசி 
மூலைக்கு வீசு

தலையை மட்டும் எடுத்துக் கொள்;
நெஞ்சுக்குழியில்
புதைத்துச் சூடாக்கு;
மரணமென்பதின் 
உன்னத இன்பம் காட்டு

அசைவற்றுக் கிடக்குமென்
சிரத்தை
சிந்தனைச் செய்யாது
சிரத்தையோடு எடுத்து
முகத்தருகே கிடத்து!

மூக்கால் முகம் வருடு
முத்தம் கொடுக்க
பிரயத்தனம் செய்

உலர்ந்திருக்கிறதா உதடு?
கண்ணைத் துடை
இது மென்மைப்படுத்தும்
பரிகார பூஜை
 
கொடுத்தாயா முத்தம்?
இப்பொழுது...
இப்பொழுதென் நாக்கை வெளியிழு;
உன்னுடலெங்கும்
எச்சில் பூசச் செய்!

என்னது?
மகரந்த வாசமா?
பொய்க்காரி!
உன் பொய்களில்
விறைக்கிறதென் உயிர்
சிலிர்க்கிறதென் சிதை
அளவாய் பொய் சொல்!

இரதி!
காதலென்றால்?
தெரியாதா?
காமத்தின் பிரசவம்!

ஆதிரா!
காமமென்றால்?
தெரியாதா?
காதலுக்கான தாய் பால்!

சித்தாந்தங்கள் வேண்டாம்
கருத்தியல்கள் வேண்டாம்

காமமென்பது
பெருவரம்
காதலென்பது
துணை வரம்!

இப்போதெங்கென் தலை?
மறுபடி முகத்திடை கிடத்து ;
காது கடித்து தலைமயிர் பற்று;
மறுபடி பொன்னுடலத்தில்
எச்சில் பூசிக் கொள்

சலிக்கிறதா?
சொடுக்கிட்டு கொட்டாவி முறி!

விழித்துக்கொள்!
இடுக்கிலொழிந்த 
இதழ் படுக்கைக்கு - தலையை
இடம் மாற்று
கண் மூடிக்கொள்!

வாடாவவ் ஈர இதழிடுக்கில்
வறண்டவென் இதழ் ஈரமாக்கு

இது 
நான் உனக்களிக்கும்
மரணத்தின் 
உன்னத இன்பம்!

இது
உனதும் எனதுமான
யோத வேள்வியின்
வரம்!

ஏன் மூச்சிரைக்கிறாய்?

அது தான் காமத்தின் தியாகமா?
என் நடுக்கமென்பதும், வியர்வை என்பதும்
இத்தியாதி தியாகம் தானா?

தீவிரப்படுத்துத் தீங்கே!
வாய்
மூக்கு
கண்
மோவாய்
உணர்வற்ற இவைகளை
உணர்ச்சி வசப்படுத்தி
உன் வசம் வசியம் செய்!

வலமிடம் காட்டு
கடல் கடைந்தது போல
உடல் கடையக் கிடைக்கும்
பேரமுதம் நோக்கி 
ஆற்றுப்படுத்து!

குலைந்து வியர்;
புழுவாய் துடி;
கால்களை இறுக்கிக் கொள்;
சுவாசம் அடைத்துச் சாகடி!
 
பிரபஞ்ச விளிம்புத் தேடு
எனக்கும் காட்டு

குறிகள் சேர்வது தான்
உண்மைக்கலவு என்றுறைக்கும்
வேதங்களை பொசுக்கு!
 
எனக்கு இது பிடித்திருக்கிறது
உனக்கும் பிடித்திருக்கிறது
இது நம் அலாதி கலவி வகை
கொண்டாடித் தீர்!

உச்சப்படுத்து;
இதழ் வேர்;
வெள்ளையடித்து
வண்ணமாக்கு;
என் ஜன்மப் பாவங்களை
பெருக்கெடுக்கும் பிரவாகத்தால்
புனிதமாக்கு!

கலவி சிற்றின்பமெனும் 
பொய் உடை;
பீய்ச்சியடித்துச் சோர்!

கண்மணி!
மெல்லச் சிரி;
இமை திற;
இன்பத்தில் காய்க்கும்
கண்ணீர் கனிகளை துடை!

இப்போது..
இப்போது..
மெல்லவென் தலை பற்று;
முகத்தருகே கொண்டு போ;
கோதி விடு;
நெற்றியில் முத்தம் தா!

திரும்பி இருக்கிறதா
என் முண்டம்?
கட்டிக்கொள்
கூதலடிக்கிறது

அங்கதத் தேக்கமே!
பெரும்புணர்ச்சியே!
வா
வந்தென் அருகில் படு!
இப்போது சொல்
ஏதேனும்
தவறவிட்டத் தவறு சிரிக்கிறதா?

- ஹஜன் அன்புநாதன் - 





 

Comments

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்