கண்ணகியும் CATASTROPHIC காதலனும்
பனை முறத்தில் சாமை புடைத்துக் கொண்டிருந்த கண்ணகி கோமணத்தோடு வந்த கோவலனை கேவலமாய் பார்த்து குபேர மூலை அலற எகத்தாளமாய் சிரித்தாள் வெக்கத்தில் குணிந்தவன் வெக்கமின்றி ‘கண்ணகி! என் தெய்வமே!’ என்றான் தம்பத்தில் ஒளிந்திருந்த காதலர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து கோவலனை பார்த்து எகத்தாளமாய் இளித்தனர் முடியள்ளி முடிந்த பத்தினி சத்தமாய் சொன்னாள் ‘மாதவி மணாள! ஈசான மூலை கதவுக்கு பக்கத்தில் ஈர்க்குமாறு ஓய்வெடுக்கிறது எடு துடப்பம் தெளி சாணம் செய் முறைவாசல்’ என்றாள் உடையுலர்த்தக் கட்டியிருந்த கயிற்றில் பூனை மேனி துடைக்க – அவள் வைத்திருந்த – அவன் பழைய அங்கவஸ்திரத்தை எடுத்து இடையில் தரித்தவன் கிணற்றருகே சென்று நீரள்ளியெடுத்தான் தெளிப்பதற்கு பிட்டத்துப் பக்கத்து ஓட்டையில் வெளிதுறுத்திய அவனது குண்டிமுடி பார்த்து எக்ஸ்ற்றா ஐஸ்’இட்ட மாச்சாவை கையிலேந்தி ரெற்றோ பெர்சோல் சன்க்ளாஸ் அணிந்து சிரித்தவாறு பார்த்திருந்தாள் ஆளுடைய நாச்சி முறைவாசலின் பின்னர் நேர்புள்ளிக் கோலமிட்...