அணைக்க மறந்த கதை
பைத்தியம் பிடித்த - கடல் உறுமிக்கொண்டிருந்தது வாகன நெரிசலில் - தரை பொருமிக்கொண்டிருந்தது இடியோடு கத்தி - வானம் அழுதுக்கொண்டிருந்தது வழமைக்கு மாறாக - காற்று விசிரிக்கொண்டிருந்தது நம் உதடுகளில் - சிகரட் எரிந்து கொண்டிருந்தது ஐம்பூதம் ஒருமித்த இரவில் அந்தரத்தில் நின்றிருந்தோம் மேம்பாலம் இருபது கால் விரல்களிலும் - ரேகை எண்ணிக்கொண்டிருந்தது! நீ இடப்பக்கம் நான் வலப்பக்கம் நாகரிக இடைவெளிக்கு நடுபக்கம்! உன் ஒரு கையில் பூங்கொத்து, உரசி நடக்க வழிவகுத்து மழையில் குடித்த தண்ணீரை மெது மெதுவாய் உதறிக்கொண்டிருந்த அந்த ஒற்றைச்சிறுகுடை மறுகையில். குடையை நான் வாங்கி கீழ் வைக்க நனைந்த உன்னை பொருட்டில் கொள்ளாமல் நானளித்த பூங்கொத்தின் ரோஜாக்களின் மேல் படிந்த மழைத்திவலைகளை துவடிக் கொண்டிருந்தாய் சாபவிமோச்சனம்! உன் கைப்பையின் இரண்டாம் சிப்பரை திறந்து சிரித்துக்கொண்டிருந்த டன்ஹில் பெட்டியை வெளியிலெடுத்தாய் மற்றைய சிப்பரிலிருந்து லைட்டரை எடுத்தாய் பற்றவைத்தோம் போர்வை போர்த்தியிருந்த இரவு சிகரட் வெளிச்சத்தில் உடலுலுப்பி விட்டு கண் சிமிட்டி ம...