ஞெகிழி
இவ்வரிசையில்
சந்தைப்படுத்தல்;
தொழிநுட்பம்;
அரசியல்;
மதம்;
சமூக வலைதளம்
...
படித்திருந்தும் நாம்
நம் அறுவடைகளை
பெயருரு தெரியாத எவனுக்கோ
அப்பாவித்தனத்தோடு சேர்த்து
படையல் செய்து கொண்டிருக்கிறோம்
உலகம் உருண்டுகொண்டே
இருக்க
நம் சிந்தனைகள்
இருக்க
நம் சிந்தனைகள்
இருண்டுகொண்டே செல்கிறது
...
கல்லோடு மனிதன்
நெருப்புருவாக்கி
இன்றோடு ஆண்டுகள்
ஒன்றரை மில்லியன்
கடந்து விட்டது!
இத்தனையாண்டின் மனிதகுல வளர்ச்சியை
என்பது ஆண்டு முன் வந்த
உன்னதமான கணினியின்
உதவியோடு இன்று
உள்மண்டை தூங்க வைத்து
சிதைத்துக் கொண் டிருக்கின்றோம்!!
...
நெருப்புருவாக்கி
இன்றோடு ஆண்டுகள்
ஒன்றரை மில்லியன்
கடந்து விட்டது!
இத்தனையாண்டின் மனிதகுல வளர்ச்சியை
என்பது ஆண்டு முன் வந்த
உன்னதமான கணினியின்
உதவியோடு இன்று
உள்மண்டை தூங்க வைத்து
சிதைத்துக் கொண் டிருக்கின்றோம்!!
...
ஏமாளிகள் நாம்
மடமை
கண்ணுக்கு மையெழுதி கொண்டிருக்கிறது
...
ஆட்டுமந்தை மேய்க்க
இடையரென இருப்பது போல்
மனித மந்தை மேய்ப்பதற்கு
சூப்பர் வைசர்
மேனேஜர்
சீ இ ஓ
மந்திரி
மாண்புமிகு மடையர்கள்
இத்தனையும்
!?
நாகங்கள் போல்
வரிப்புலிகள் போல்
நாம் நம்மையே தின்றுகொண்டிருக்கிறோம்!!!
...
என்மணிநேர தூக்கம்;
உன்னதமான உணவு வேளை;
சிருங்கார காதல்;
கண்பார்த்த உரையாடல்;
குடும்பத்தோடு சல்லாபம்;
நல்லப் புத்தகம்;
உடல் பயிற்சி;
விளையாட்டு
ஒன்பது மணி முதலாளித்துவ விருத்திக்கா
இத்தனையும் இழந்து கொண்டிருக்கிறோம்?
...
நம்மில் எத்தனை பேர்
நல்ல உணவு தின்றுகொண்டிருக்கின்றோம்?
ரீல்ஸ் – யூ ட்யூப் – டிக் டாக்
இந்த பரிந்துரைகளை அல்லவா
கொறித்துக் கொண்டிருக்கிறோம்
...
நல்ல கலவியை
நம்மில்
எத்தனை பேர் ருசித்துக் கொண்டிருக்கிறோம்?
கைப்பேசி பார்த்தே
கையடித்து முடிகிறது கலவி!
மெய்நிகர் நிர்வாணத்திலேயே
குடும்ப நீதிமன்றம் செல்கிறது காதல்!
அலாரத்துக்கு பயந்தே தூங்கிப்போகும் போது
காலைவரை நீடிக்கும் கலவரங்களுக்கு எங்கனம் கைகொடுப்பது?
...
கண் பார்த்து கவிதை சொல்
உதடு கடிப்பதில்
மனித வெட்கம் கொள்
தூங்கிப்போகும் முன்
திருப்தி கேட்டு
நெற்றி முத்தம் கொடு!
நல்தாம்பத்தியம் தான்
நல்வாழ்வுக்கு உந்துதல்
அல்லது
ஒளடதம்!
ஒளடதம்!
...
தேவைக்குத் தேவையற்ற
எத்தனை எத்தனை குப்பைகளை
சமையலறையிலும் -
கழிவறைத் திடலிலும் -
கட்டிலுக்கு அடியிலும் -
நடப்பில் பயனின்றி
ஒழித்தோ ஒதுக்கியோ வைத்திருக்கிறாய்?
கழிவறைத் திடலிலும் -
கட்டிலுக்கு அடியிலும் -
நடப்பில் பயனின்றி
ஒழித்தோ ஒதுக்கியோ வைத்திருக்கிறாய்?
...
விளம்பரங்களுக்கெதிராய்
என்றேனும் - எப்போதேனும்
தூங்கும் முன்னரோ - பல்துலக்கும் நேரமோ
என்றேனும் - எப்போதேனும்
உனக்குள்ளேயாவது
கேள்விகள் கேட்டிருக்கிறாயா?
கேள்விகள் கேட்டிருக்கிறாயா?
இங்கே போட்டிப் போட்டு
விற்பனை செய்பவனெல்லாம்
ஒன்றாகத்தான்
புட்டி உடைத்து
உறவாடிக்கொண்டிருக்கிறான்
நாம்
பாவப்பட்ட நாம் தான்
சந்தைப்படுத்தலெனும்
விதவை சிலந்தியின்
மோக வலையில் மாட்டி
தவித்துக்கொண்டிருக்கின்றோம்
அது நம் இரத்தம் உரிஞ்சிக் கொண்டிருக்கின்றது
நாம் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்!!
...
அரசியல் செய்ய மதம் எதற்கு?
ஆணவக்கொலைகளில் அப்படியென்ன கௌரவம்?
மசூதிகளில் ஏன் ராமகீதங்கங்கள் இசைக்கின்றன?
நடிகர்கள் ஏன் அரசியலில் குதிக்கின்றனர்?
நிறங்களை ஏன் நிர்பந்தம் செய்கின்றனர்?
இலவசமாய் மிக்ஸி எதற்கு?
பாலஸ்தீனில் ஏன் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது?
அடேய்
அவனவன் சுவாசிக்க
உன் நுரையீரலின்
சதை சப்பிக்கொண்டிருக்கின்றான்
நீ போற்றும் உன் தலைவர்களுக்கு
அல்லது மயிர் புடுங்கும் மாந்தருக்கு
நீ என்பது
ஒரு ஓட்டு
ஒரு வாடிக்கையாளர்
ஒரு அடி நக்கி
அவ்வளவு தான்
...
மலை சுமக்கும் குரங்கு
நெருப்பூதும் டிராகன்
அம்புவிடும் மன்மதன்
கோட்ஸில்லா
காளிங்க நடனம்
நண்பா,
எல்லாம் கட்டுக் கதை!
...
பூமியின் வாழ்நாளை
ஓராண்டென கொண்டால்
மனிதன் பிறந்த ஐந்தே நிமிடத்தில்
அரைடஜன் காடுகளுக்கு
மொட்டையடித்து விட்டான்
...
...
நாம் நம்மவர்களை சிதைத்து
சிதைந்து கொண்டிருக்கிறோம்!
...
இனி
எப்படி தான் வாழவதென்பதா உன் கேள்வி?
முதலில் சுயம் மதி
உன் உள்ளங்கைக்கு முத்தம் கொடு
கண்ணாடி பார்த்து கதை
ஒன்றரை கிலோ மூலையிடம்
ஒருத்துளியேனும் உதவி பெறு
அடுத்தவன் கண்களிலிருந்தும் உலகம் பார்
உணர்வுக்கும் - உயிருக்கும்
கண்ணீரோடு கொஞ்சம் மரியாதை செய்
பேசும் போது கைப்பேசித் திரை மறு
காதலிக்க நேரமொதுக்கு
சரியோ பிழையோ
முதலில் கருத்து செவிமடு
கன்னத்தசை நெகிழ சிரி!
வா!
கேள்வி கேட்போம்
நூல் அறிவோம்
சொம்பு மறுப்போம்
காதலிபோம்
செவிமடுபோம்
இயற்கை ரசித்து
கடிகாரம் அசைபோடுவோம்
அடிமைத்தனம் - அதிகாரம்
இரண்டிற்கும் சவுக்கடி கொடுப்போம்
மட கருத்தியல் எரித்து
சுய நினைவில் சுவாசிப்போம்
எட்டரை மணிநேர சயனத்தில்
செங்கிஸ்கானுடன் குதிரை சவாரி செய்வோம்
இயற்கையோடு கவிதை செய்து
விலங்குகளுக்கு பேன் பார்ப்போம்
வா
பசுந்தோல் புலிகளின்
தோலுரித்து
உப்புகண்டம் செய்வது தான்
இனி
நம் புது பொழுது போக்கு!
...
- ஹஜன் அன்புநாதன் -

♥️♥️
ReplyDelete