கார்ப்பரேட் காதலி
சாக்ஸின் கிழிந்த ஓட்டை வழி
சப்பாத்தை துலாவியவாறிருந்தது
இடது கால் சுண்டு
விரல்
ஏஸியின் அனாகரிக
குளிர்
சட்டைக்குள் ஊடுருவி
நடுக்கம் கொடுத்துக்கொண்டிருக்க
வாட்டர் ஃபில்டரில்
தண்ணீர்க்குமிழ்கள்
மேற்தளம் நோக்கி
நகர்கின்றன
டௌன்லோட் செய்ய
போட்டப் படம்
பாதி பதிவிறங்கியிருக்க
பார்வை படும் தூரத்திலிருந்து
பல்லிளிக்கிறான்
படுபாவி டீம் லீடர்
எச்.ஆர் லேடியின்
கூந்தல் சரிவினை
வாய் பிழந்து பார்த்துக்கொண்டிருக்க
மேசையின் அருகே
வந்த மாலை தேனீரில்
டோப்பமின் வழிகிறது
ப்ளைண்டர்ஸ் வழியே
பொழிகின்ற
சுந்தர பொன்னிற
சூரிய கதிர்கள்,
என்னை முந்தி விட
ஆசை என்பது போல்
நான் சுவைக்கும்
முன்னமே பருகத்தொடங்கிவிட்டன
கோப்பையில் விழுந்து
தேனீரை…
“ப்ரமோஷன் தருவானா
மாட்டானா?
லீகல் டிப்பார்ட்மென்ட்ல
அந்த பொம்பள ஏன் வரல?
கெஷுவல் லீவ்
இன்னும் நாலு தான் மிச்சம்
புதுசா வந்த
இன்டெர்ன் பொன்னுக்கு ஆள் இருக்குமா?
அடங்கோத்தா கடசி
மெயில்ல எழுத்துபிழ!
இன்வொய்ஸ்ல ரெண்டாயரம்
இடிக்கிதே
சம்பளம் வந்த
ஒடன ரெண்டு ஜட்டி வாங்கனும்”
ஒன்றன் பின் ஒன்றாய்
கோர்கின்ற
சிந்தனை தொகுப்புக்களை
விட்டத்தை மெல்லப்
பார்த்து
விமர்சிக்கின்ற
போது
விக்கலெடுக்க
என் பக்கம் பார்த்து
சிரிக்கின்றாள்
கோப்பையை கீழே வைத்தக்
காதலி
ஒற்றை நிமிடத்திற்கு
சுழல்வதை நிறுத்திய
பூகோலம்
கோப்பரேட் வாழ்க்கையில் வரைகிறது பூக்கோலம்!
- ஹஜன் அன்புநாதன் -
.png)
Good one ❤️
ReplyDelete