கண்ணகியும் CATASTROPHIC காதலனும்

 

 



பனை முறத்தில்

சாமை புடைத்துக் கொண்டிருந்த கண்ணகி

கோமணத்தோடு வந்த கோவலனை

கேவலமாய் பார்த்து

குபேர மூலை அலற எகத்தாளமாய் சிரித்தாள்

 

வெக்கத்தில் குணிந்தவன்

வெக்கமின்றி

‘கண்ணகி! என் தெய்வமே!’

 என்றான்

 

தம்பத்தில் ஒளிந்திருந்த காதலர்கள்

சத்தம் கேட்டு ஓடிவந்து

கோவலனை பார்த்து

எகத்தாளமாய் இளித்தனர்

 

முடியள்ளி முடிந்த பத்தினி

சத்தமாய் சொன்னாள்

‘மாதவி மணாள!

ஈசான மூலை கதவுக்கு பக்கத்தில்

ஈர்க்குமாறு ஓய்வெடுக்கிறது

எடு துடப்பம்

தெளி சாணம்

செய் முறைவாசல்’ என்றாள்

 

உடையுலர்த்தக் கட்டியிருந்த கயிற்றில்

பூனை மேனி துடைக்க – அவள் வைத்திருந்த – அவன்

பழைய அங்கவஸ்திரத்தை எடுத்து

இடையில் தரித்தவன்

கிணற்றருகே சென்று

நீரள்ளியெடுத்தான் தெளிப்பதற்கு

 

பிட்டத்துப் பக்கத்து ஓட்டையில்

வெளிதுறுத்திய அவனது குண்டிமுடி பார்த்து

எக்ஸ்ற்றா ஐஸ்’இட்ட

மாச்சாவை கையிலேந்தி

ரெற்றோ பெர்சோல் சன்க்ளாஸ் அணிந்து

சிரித்தவாறு பார்த்திருந்தாள் ஆளுடைய நாச்சி

 

முறைவாசலின் பின்னர்

நேர்புள்ளிக் கோலமிட்டவன்

திக்கெங்கும் பார்வை விலாசினான்

 

எங்கும் கிடைக்காததால்

மாதவியின் வீட்டு வாசலில்

பூசணிப்பூ வாங்கச் சென்றவன்

கைகட்டி நின்று

‘கண்மணி!’ என்றான்

 

தலைவாறி வெளிவந்த மாதவி

‘எடு என் செருப்பை என்றதும்’

எடுத்தான் ஓட்டம் கதாநாயகன்

 

பூனையின் புறமுதுகை வருடி கொடுத்தக் கண்ணகி

எஞ்சிய மாச்சாவை

கோலத்தின் மீது கொட்டினாள்.

நீலாம்பரியில் சீறியது பூனை!


- ஹஜன் அன்புநாதன் -

 

Comments