முத்தங்கள்




தயங்கி தயங்கி நெருங்கி

கண்கள் மூடி மயங்கி

குற்றத்தோடு கூடயில்

சொற்பநொடி நிலைக்கும்

சொர்க சேர்மானம்

முதல் முத்தம்!


இந்தமுத்தம் இயற்றையில்

இமைதிறந்திருக்கும்

இயற்கையின் விதிமறந்திருக்கும்

இது மூத்த முத்திரையின்பின்

இயன்றளவு கூச்சம் கடந்திருக்கும்

இரண்டாம் பின் மூன்றாம்!



கைகோர்த்து நடக்க

பாத சுவடுகளில்

புல் பூண்டு முளைக்க

முட்காடுகள் முல்லையாகி

தாவரங்கள் தாயாகி

வீசும்காற்றின் வெப்பம்நீங்கி

சுற்றும் பூமி வேகம்நீங்கி

எதேச்சையான எழில்கோலம்


முறையாகும் முன்னே

நீண்ட வழி பயண

நீளும் இரவில்

வரம்பு மீறும் வாலிபத்தின்

வயதுகளின் வாணிபத்தில்

உதடிணைந்து உயிர் தேய்கையில்

உலகாகும் உன்மத்தம்


மிச்சமின்றி காதல் செய்து

கட்டில் மேல் காமம் செய்து

இறுக்கம் இழிந்தப்பின்

இமைமூடி இதழ்கூடி

உச்சந்தலையில் உண்மை சத்தம்


தாரமாகி தாயாகையில்

முத்தும் வயிரோடு

ரெண்டாம் சேயாகி

உள்ளுயிர் உதைக்கையில்

கண்கள் குளமாகி

கொப்பூழ்குழி மேல்

எழுதும் கட்டுரைகள்!

எழுத்தாணி ஆணுதடு!


நரை கொண்ட நாளில்

தமக்கான கூட்டில்

சுருக்கம் தாங்கி

சுகங்கள் தாண்டி

நடுக்கமுடன் பொக்கை முத்தம்


முத்தங்கள்!

காதல் சக்கரத்தின்

அவசிய அச்சாணிகள்!

ஊடல் உடைப்பதில்

உத்தம உயர்திணைகள்!



- ஹஜன் -


Comments

  1. Nice one hajan ��

    ReplyDelete
  2. இதயத்தை உலுக்கிய பதிவு நண்பா

    ReplyDelete
  3. சிறப்பு ❤

    ReplyDelete
  4. The most wonderful poems are the most adorable

    ReplyDelete
  5. I feel that the quality poetry effort has gotten a better answer

    ReplyDelete
  6. Vaarthaiyatru nitkiren ❤️ arpudhamana padhivu

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்டு போங்க