மனிதனுக்கும் நிறமுண்டு


 


நேற்று சிரித்தான்
பாவனைகள் செய்தான்
அவன் பேசிய நேரங்களில்
மணிக்கூடும் நாணியது

பயணங்கள் கொள்வோம்
அதுகள் செய்வோம்
இதுகள் திருத்துவோம்

எனக்கு பெருங்கவலை
உனக்கும் உண்டோ கவலை
நீ நல்லவன்
நான் கண்டதில் உத்தமன்
அழகாய் பேசுகிறாய்
கவிதையில் தேற்றுகிறாய்
பொய்களை பொன்னாக்குகிறாய்

இன்றேனோ
அந்த பாவனைகள் எல்லாம்
முகச் சுழிப்பில்
மூடி மறைத்து
நான் ஒரு மனிதனென்று
நாளை நோக்கி நகர்கிறான்

மனிதனுக்கும் நிறமுண்டு!

Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்