தபோவனம்


 

தேவை முடிந்த இலைகளைஉதிர்த்து
இயற்கையை புதுமைசெய்யும் காடு

தவசிகள் தவநிலமாய்
அமைதியால் அமைந்த காட்டில்
அமைதி கெடுக்க கூவும் குயில்,
ரீங்காரமிட்டு வலவும் வண்டினம்

புகைத்தல் புற்றுநோய்க்காரணி
கத்திசொல்லந்த கானக விருட்சமிடை,
பனி கசிகிறது பர்வத அந்தரத்தில்

ஏனிந்த போராட்டம்?
சூரியக்கீற்றுகள் தரைத்தொட!

பாதி இருள் பாதி பகல்
 வருடமுழுவதும் அடவி ஆட்சி
காடாழ்பவன் கடவுளோ?
கடவுள் கவிஞனோ?

தட்டான் தாவி திரிகிறது
பச்சோந்தி நிறங்கள் தொலைக்கிறது
மரம்விட்டு மரம்தாவ தவளை
இலைகள் சேர்த்த தண்ணீர் கவிழ்கிறது
தண்ணீரோடு மனமும்!

சருகுகள் தரைக்கூட்டும்
மலைக்குருவி பீலிக்கூடை

கிளை வடிந்து
குட்டை சொட்டும் நீர் சொட்டு
மீண்டுமோர் அமைதிக்கேடு

குளிர்மை,
தேக சுத்திகரிப்பு
மரம்விடும் மூச்சு,
பாவம் கழுவும் மாருதம்!

தேட தேட புதையல்கள்
கவிதைகளின் பிறப்பிடங்கள்


நான் என்னை நீங்கினேன்
மழைச்சோலைத் தூங்கினேன்



Comments

  1. கண் கலங்க வைத்த பதிவு தோழர் ❤️

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பா

      Delete
  2. Ennaama feel pannorukkaapla❤️

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் hajan ♥️

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பா ❤

    ReplyDelete
  5. Sooper ah irukku bhaa ❤❤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்