ஃபரீதா!


மசூதி சாலைகளின்
மதில்களை தாண்டாத பாதம்
இன்று நிக்காஹ் வரை
நடந்து வந்திருக்கிறது
நடைப்பழக்கியது நீயா?
மதங்களை மாட்டித் திரியும் மானுடமா?

ஃபரீதா!
பருவம் தின்றவளே
பார்வை தந்தவளே

பரிதா வழி விரியும் கண்களின் மேல்
நான் கொண்ட காதலும்
பாய்கடை சந்தியில்
உன் தேகம் உமிழும் வாசமும்
இன்று போல் என்னை
புதிதாய் ஈன்றெடுக்கிறது

மஸ்காரா உன் கண்களை எழுத
பேனை முனை உனை மட்டும் எழுதியது
மிஞ்சியே எனை திருடாமல் திருடியது

பேச நினைத்து
பேச தவறிய நாட்களெல்லாம்
என்று நினைத்தாலும்
நெஞ்சம் படபடக்கும்
மசூதி சாலையோர- கோயிலில்
மணி அடிக்கும்

பால் திருகி தயிர்
மோர் நெய் ஆவது போல்
பரிதாப பார்வை என்
பரிதாவின் பார்வை முன்
காதலாகியது!
அதனாலின்று கண்ணீர் ஊறியது

ஊசி முனித்தவம்
உயிர் பெற்று வரமாக
பேசி தீர்த்திட – புதிதாய்
வார்த்தைகள்!
புழுகாத கவிதைகள்!

என்ன ஒரு புதினம்!
ஒழிந்தொழிந்து பேசிய
வார்த்தைகள் யாவும்
காதிடுக்கில் இன்றும்
கசங்காமல் கதைக்கிறது
அமைதி நெஞ்சமிதில்
புழுதி செய்கிறது!

உண்டான ஸ்பரிசங்கள்
உருவான நெருக்கங்கள்
ஸ்வர்ண சூரியனை
சூட்டடுப்பில் கிடத்தி 
சாயங்கால சந்திரனை
சட்டசபை நிறுத்தி
புதினங்கள் பூப்பித்தது!

அன்றே சொன்னாய்!
நம் தெருக்களையே இதுவரை
இணைக்கக் காணோம்
காதலையா இணைக்குமிந்த
சமூகம்?
நிச்சயமாய் சொன்னேன்
மதம் மனிதாபிமானம் இணைக்குமென்று

சாலையும் இணைக்காது
காதலின் சாராம்சத்தை நோக்கி இழுக்கிறது

எத்தனை தொழுகைகள்
எத்தனை தோப்புக்கரணங்கள்
காதலுக்கு மட்டுமில்லை
கடவுளுக்கும் கண்ணில்லை!

அடியே ஃபரீதா!
அதிசய கிளியே
இனி எத்தனை நிமிடங்கள்
என்னுடையவளாய் இருப்பியோ?
என் கிளியின் கல்யாணத்துக்கு
கடிகார பரிசு!

நாளை உன் பிள்ளை
மாமாவென்றென்னை சொல்லும்
சொல்லிக்கொடு அந்த பிள்ளைக்கு
மாமனல்ல அவன் 
பாதி பாதையில் ஃபரீதாவை நீங்கிய
பாவி பயல் என்று!




Comments

Post a Comment

Popular posts from this blog

முத்தங்கள்

நட்சத்திரங்களடி

அந்தி மழை

காதல்

மோக முள்

இருபதுகளில் நான்!

அண்ணே ஒரு டீ...

ஆறாம் புலன்